உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2023-09-18 15:39 IST   |   Update On 2023-09-18 15:39:00 IST
  • சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  • புளியோதரை, சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சா அமிர்தம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி.  

கிருஷ்ணகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி நகரில் பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வரசித்தி விநாயகர் , புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் , காந்தி நகர் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் , இதே போல் டான்சி வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில், ராசு வீதியில் உள்ள மஹா கணபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த பூஜையின் போது அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இனிப்பு பொங்கல், புளியோதரை, சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சாஅமிர்தம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் விழாவையொட்டி, ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள விநாயகர்கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கோவில்கள் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விநாயகர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

Similar News