உள்ளூர் செய்திகள்

கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Published On 2023-04-14 15:22 IST   |   Update On 2023-04-14 15:22:00 IST
  • கிருஷ்ணகிரியில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
  • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர்.

கிருஷ்ணகிரி,

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.

வெள்ளிக் கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News