உள்ளூர் செய்திகள்
விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பெரியகுளத்தில் அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பு பூஜை
- எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
பெரியகுளம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் நகர பொறுப்பாளர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதன் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரிய வீரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.