உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்த போது எடுத்த படம்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 100 இடங்களில் சிறப்பு தொழுகை

Published On 2023-06-29 08:45 GMT   |   Update On 2023-06-29 08:45 GMT
  • பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன.
  • இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.

ஆறுமுகநேரி:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் மக்கின், பொருளாளர் பஷீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் ஷரீப் குத்பா பிரசங்கம் நடத்தினார்.

தொழுகையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனிடையே காயல்பட்டினம் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல், முகைதீன் பள்ளி, புதுப்பள்ளி, மரைக்கார் பள்ளி, பிலால் பள்ளி உள்பட 30 பள்ளிவாசல்கள், பெண்கள் வழிபடும் தைகாக்கள் உள்பட 100 இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை மற்றும் பிரசங்கம் நடந்தன. பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரை பூங்காவில் அனைவரும் குடும்பத்தின ருடன் கூடி மகிழ்வர்.

Tags:    

Similar News