உள்ளூர் செய்திகள்

தஞ்சை கீழவாசலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

தஞ்சையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை

Published On 2023-06-29 09:49 GMT   |   Update On 2023-06-29 09:49 GMT
  • உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
  • தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

தஞ்சாவூர்:

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா மண்டப வளாகத்தில் இன்று காலை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொ ருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல் தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றன.

பின்னர் இஸ்லாமியர்கள் பலர், தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவை களுக்கு பயன்படுத்தினர்.

மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News