உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமில் கலந்துகொண்டவர்கள்.

திண்டுக்கல் அருகே சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-12-12 13:31 IST   |   Update On 2022-12-12 13:31:00 IST
பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டபட்டியில் தாடிக்கொம்பு வட்டாரம், நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர். விக்னேஷ், டாக்டர் ராஜரவிவர்மன், ஊராட்சி மன்ற தலைவர் பரமன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News