உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமில் மாணவர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ உள்ளனர்.

தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-01-11 08:14 GMT   |   Update On 2023-01-11 08:14 GMT
  • தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் சிவசங்கரன், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநகர பகுதிகளில் பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் பயன்படுத்து வதற்காக பல பூங்காக்களை செப்பனிட்டு வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதன் ஓரு பகுதியாக டூவிபுரத்தில் உள்ள சங்கர நாராயணன் பூங்கா மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் கரிசல் இலக்கிய பூங்காவையும் முழுமையாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்க ளையோ, பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வைத்திருக்கவோ, விற்கவோ வேண்டாம் என்று மேயர் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News