உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி யூனியன் அலுவலக கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்த காட்சி.

நாங்குநேரியில் யூனியன் அலுவலக புதிய கட்டிட பணியை சபாநாயகர் திடீர் ஆய்வு

Published On 2023-07-06 14:30 IST   |   Update On 2023-07-06 14:30:00 IST
  • நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை:

நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து அங்கு புதிய அலுவலகம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வேலையை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நாங்குநேரி யூனியனில் இயங்கி வரும் நாங்குநேரி வட்டார மகளிர் திட்ட குழு உறுப்பினர்களிடம் அவர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குறை களையும் கோரிக்கை களையும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார், பொறியாளர்கள் சபரி காந்த், மீனாட்சி, மேலாளர்கள் மலர், முருகப்பெருமாள், மகளிர் திட்ட குழு கலா மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News