உள்ளூர் செய்திகள்

பல்வேறு யோகாசனம் செய்து அசத்திய மாணவ-மாணவிகள்.

கம்பத்தில் தென்மாவட்ட அளவிலான யோகா போட்டிகள்

Published On 2023-10-16 13:15 IST   |   Update On 2023-10-16 13:15:00 IST
  • ரிஷியோகா அறக்கட்டளை மற்றும் தேனிமாவட்ட யோகாசன சங்கம் சார்பில் தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.
  • இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.

கம்பம்:

கம்பத்தில் ரிஷியோகா அறக்கட்டளை மற்றும் தேனிமாவட்ட யோகாசன சங்கம் சார்பில் தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.ரிஷியோகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துரை.ராஜேந்திரன் வரவேற்றார். உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமை தாங்கினார்.

கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி இணை செயலாளர் சுகன்யா காந்தவாசன், ேயாகா பயிற்சியாளர் ரவிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட யோகாசன சங்க பொருளாளர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். யோகா போட்டிகள் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 12 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரர்களுக்கு தனி நபர் பரிசுகளும், குழு பரிசுகள் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் யோகாசனப் போட்டியில் கம்பம் புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மன வளர்ச்சி குன்றிய மாணவி மதுமதி கூர்மா ஆசனம், சமகோண ஆசனம், ஹனுமன் ஆசனம் செய்தார். அப்போது தனது முதுகில் 70 கிலோ எடை கொண்ட தனது பயிற்சியாளரை நிற்க வைத்து சாதனை படைத்தார்.உதவி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பார்வையாளர்கள் சாதனை மாணவியை பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

Similar News