உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட பாம்புடன் தீயணைப்பு வீரர்கள்.

சாத்தான்குளத்தில் மழைக்கு ஒதுங்கியவரின் மோட்டார் சைக்கிளில் பதுங்கிய பாம்பு

Published On 2022-11-28 14:55 IST   |   Update On 2022-11-28 14:55:00 IST
  • முத்தையா மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளம் பஜாருக்கு வந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் பாம்பு ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கியது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியில் நேற்று மதியம் திடீரென மழை பெய்தது. அப்போது கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா (வயது35) என்பவர் மோட்டார் சைக்கிளில் பஜாருக்கு வந்தார்.

மழை வேகமாக பெய்ததால் இட்டமொழி சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கு உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்றுள்ளார்.

அப்போது கழிவு நீரோடையில் வந்த பாம்பு ஒன்று மோட்டார் சைக்கிளில் ஏறி சீட்டுக்கு அடியில் பதுங்கியது. அருகில் நின்றவர்கள் பதறிபோய் பாம்பை விரட்ட முய ன்றனர். அது மோட்டார் சைக்கிளை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சாத்தான்குளம் தீயணைப்புத் துறை யின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை பிடி த்து பத்திரமாக வனப் பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News