உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே லாரியில் ரேசன் அரிசி கடத்தல்

Published On 2023-01-07 14:31 IST   |   Update On 2023-01-07 14:31:00 IST
  • ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • லாரியை ஓட்டி வந்த ரகோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் திருமாள் தலைமையில் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் 16 டன் ரேஷன் அரிசி 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த உளுந்தூர்பேட்டை அருகே கிளியூர் மேற்கு தெருவை சேர்ந்த ரகோத்தமன் (வயது 27) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News