உள்ளூர் செய்திகள்

சிவன்மலை ஜேசீஸ் பள்ளி ஆண்டு விழா

Published On 2023-02-04 05:29 GMT   |   Update On 2023-02-04 05:29 GMT
  • முன்னாள் பள்ளி மாணவருமான டாக்டர் ஜி.விவேகானந்தன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
  • முடிவில் ஜேசீஸ் நர்சரி-பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

 காங்கயம் :

காங்கயம் சிவன்மலை  ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி துணைத்தலைவர் ஏ.உமாதேவி அர்ச்சுனசாமி தலைமை தாங்கினார். காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஸ்குமாரும்,சேலம் எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவ ஆலோசகரும்,முன்னாள் பள்ளி மாணவருமான டாக்டர் ஜி.விவேகானந்தன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கவுரவ விருந்தினர்களாக காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர், சிவன்மலை ஊராட்சி தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பள்ளி தாளாளர் சி.பழனிசாமி வரவேற்றார்.

அகாடமிக் இயக்குனர் பி.சாவித்திரி, எஸ்.ஜானகிசவுந்தர்ராஜன், ஜி.மகேஸ்வரி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் 2022-ம் ஆண்டு 10,12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளையும், பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரிய-ஆசிரியைகளையும் டாக்டர் ஜி.விவேகானந்தன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் பள்ளி தலைவர் ஏ.கோபால், பொருளாளர் பி.மோகனசுந்தரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏ.ஆர்.அசோகன், வி.பி.கொங்குராஜன், எஸ்.மதியழகன், ஆர்.ஏ.மகாலிங்கம், ஆனந்விஷ்ணு மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். முடிவில் ஜேசீஸ் நர்சரி-பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News