புரவிகளுடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
277 புரவிகளுடன் நேர்த்திக்கடன் செலுத்தி கிராம மக்கள் வழிபாடு
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சியில் 277 புரவிகளுடன் நேர்த்திக்கடன் செலுத்தி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
- இந்த புரவிகள் காட்டு வழியே சென்று அய்யனார் கோவில்களில் நேர்த்திக் கடனாக கருதப்படும் குழந்தைபேறு, தீராத வழக்குகள், நெடுநாள் நோய்கள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேறிய மகிழ்ச்சியில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள சிறைமீட்ட அய்யனார் கோவில் மற்றும்,எஸ்.கோவில்பட்டியில் அருள்பாலிக்கும் செவிட்டு அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுயம்புவாக அருள்பாலிக்கும் இந்த ஐயனார் ஆலயம் தனக்கென்று கோபுரம் இல்லாமல் காட்டுப்பகுதியில் மரம் செடிகளுக்கு நடுவே அமைந்து இருப்பது சிறப்பாகும்.
கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் புரவி எடுப்பு விழா துவங்கியது. நேற்று 277 புரவிகள் கச்சேரி திடலில் வைத்து அலங்கரிக்கப்பட்டன. அதனுள் முகம் பார்க்கும் கண்ணாடி, பலூன், மாவிலை, தென்னங்குருத்து, போன்றவர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்ணமிகு புரவிகள் நேர்த்திக்கடன் பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டு புரவிப்பொட்டலில் வைக்கப்பட்டது.
புரவி பொட்டலில் சிறப்பு வழிபாடுகள் முடிந்ததை அடுத்து சிறை மீண்ட அய்யனார் ஆலயத்திற்கு ஒரு அரண்மனை புரவியும், செகுட்டையனார் ஆலயத்திற்கு ஒரு அரண்மனை புரவியும் என மொத்தமாக 277 பிறவிகள் புறப்பட்டன. சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்திருந்த இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தோளில் சுமந்து வந்த மண் குதிரைகள் பார்ப்பவர்களை பிரம்மாண்டத்தில் ஆழ்த்தியது.
இந்த புரவிகள் காட்டு வழியே சென்று அய்யனார் கோவில்களில் நேர்த்திக் கடனாக கருதப்படும் குழந்தைபேறு, தீராத வழக்குகள், நெடுநாள் நோய்கள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நேர்த்திக்கடன் நிறைவேறிய மகிழ்ச்சியில் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.