உள்ளூர் செய்திகள்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு மேற்கொண்ட கலெக்டர் ஆஷா அஜீத்.

திருப்புவனம் ஊராட்சி அலுவலகத்தில் ஆண்டாய்வு மேற்கொண்ட கலெக்டர்

Published On 2023-06-22 14:13 IST   |   Update On 2023-06-22 14:13:00 IST
  • திருப்புவனம் ஊராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஆண்டாய்வு மேற்கொண்டனர்.
  • அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அந்த ஊராட்சி ஒன்றி யங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆண்டாய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவை சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவை யிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்தார்.

மேலும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பரா மரிக்கப்பட்டு வரும் பதி வேடுகள் தொடர்பாகவும், அலுவலக பணியா ளர்களின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும் கலெக்டர் கேட்ட றிந்தார்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் (மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம்) சித்ரா, அலுவலக மேலாளர் (வளர்ச்சி) திருப்பதிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News