உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் உள்ளனர்.

பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்-அமைச்சர் தகவல்

Published On 2023-09-05 06:51 GMT   |   Update On 2023-09-05 06:51 GMT
  • ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில்ன பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு எந்திரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் கோடி அளவில் பயிர் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கும் கூடுதலாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி பயிர் கடன்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.

பயிர் கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் கலெக்டர், இணைப்பதிவாளரை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை எந்தியரமயமாக்கல் திட்டம் 2023-24-ன் கீழ் மானிய விலையில் பவர் டில்லர், பவர் வீடர் எந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழா திருப்பத்தூர், மானாமதுரையில் நடைபெறுகிறது.

அதில் திருப்பத்தூரில் நடைபெறும் விழாவின் மூலம் 68 விவசாயி களுக்கும் மானாமதுரையில் நடைபெறும் விழாவின் மூலம் 77 விவசாயிகளுக்கும் என மொத்தம் 145 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 12 ஆயிரம் மொத்தம் ரூ.3 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீ்ட்டில் மானிய விலையிலான பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிறு விவசாயி களுக்கு ரூ.85 ஆயிரம் மானியத்தொகையும், பெரு விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் மானிய தொகையும் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்த விவசாயி களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மானியத்தொகையும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில்இ திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் முத்துக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News