உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டப்பட உள்ள இடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-06-19 08:04 GMT   |   Update On 2022-06-19 08:04 GMT
  • மானாமதுரை வைகைஆற்றில் பாலம் அமைய உள்ள இடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • ஆற்றில் மண்பரிசோதனை ஆய்வு நடைபெற்றது.

மானாமதுரை

சிவகங்கை மாவடடத்தில் வளர்ந்து வரும் பெரிய நகரம் மானாமதுரை ஆகும். தற்போது நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வைகைஆற்றில் புதிய பாலத்திற்கு அப்போதைய தி.மு.க. அரசில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் தா.கிருட்டிணன் அடிக்கல்நாட்டினார்.

அதன்பின் இந்த பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு நிறைவேற்றபடாமல் இருந்தது. இந்த திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி பாலம் கட்ட நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று மானாமதுரையில் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரசி எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.

அதன்படி கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். என பேசினார்.அதைத்தொடர்ந்து மானாமதுரை வைகை ஆற்றில் மண்பரிசோதனை ஆய்வு நடைபெற்றது.

தற்போது மானாமதுரை வைகை ஆற்றில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கும் இடமான போலீஸ் நிலையம் எதிரே உள்ள வைகை ஆற்றில் தமிழரசி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம், கவுன்சிலர் இந்துமதி மாவட்ட பிரதிநிதி சிப்காட் காளியப்பன் ஆகியோர் உடன்இருந்தனர்.

Tags:    

Similar News