உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நேரில் ஆறுதல் கூறிய காட்சி.

பலத்த காயம் அடைந்தவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆறுதல்

Published On 2023-10-17 07:57 GMT   |   Update On 2023-10-17 07:57 GMT
  • சிவகங்கை அருகே நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
  • உயர் தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும், படமாத்தூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனமும் கட்டுப் பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளா னது. இதில் பேருந்தில் பயணம் செய்த 27 மாணவ, மாணவிகள், 9 பேராசிரி யர்கள் காயம் ஏற்பட்டு சிவ கங்கை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்த சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் உடனே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயர் தர சிகிச்சை அளிக்க மருத்து வர்களிடம் கேட்டு கொண் டார்.

அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங் கோவன், ஒன்றிய செயலா ளர்கள் செல்வ மணி, கோபி, பழனிச்சாமி, ஜெக தீஸ்வரன், நகர் துணை செயலாளர் மோகன், பாசறை மாவட்ட பொருளா ளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவ ராஜ், அமைப்புசாரா அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாவட்ட மாணவரணி அன்பு மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர் வாகிகள் சென்றனர்.

Tags:    

Similar News