உள்ளூர் செய்திகள்

பஸ்சில் தொங்கி செல்லும் பயணிகள்.

பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகள்

Published On 2022-06-18 13:57 IST   |   Update On 2022-06-18 13:57:00 IST
  • பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்டநெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இருந்து சிவகங்கைக்கு தினமும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசுஅலுவலர்கள், நோயாளிகள் என ஏராளமான பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் அதிக கூட்ட நெரிசலுடன் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. படிகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் தொற்றி கொண்டு செல்லும் நிலை உள்ளது.

இதேபோல் மானாமதுரை வழியாக திருச்சி வரை குறைந்த அளவில் பஸ்கள் இயக்கபடுவதால் மானா மதுரையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை நின்று செல்லும் நிலைஉள்ளது. திருச்சியில் இருந்து மானாமதுரை வழியாக இரவு நேரத்தில் பரமக்குடி ராமேசுவரம் சென்ற அரசுபஸ்களும் நிறுத்த பட்டால் மானாமதுரை பயணிகள் திருச்சியில் இருந்து மதுரை வந்து சுற்றி வரும் நிலை உள்ளது.

எனவே மானாமதுரை சிவகங்கை இடையே கூடுதல் பஸ்களும் மானாமதுரை வழியாக திருச்சி க்கு கூடுதல் பஸ்களை இயக்கவும், மானாமதுரை வழியாக திருச்சியில் இருந்து ராமேசுவரம் பரமக்குடி செல்லும் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News