உள்ளூர் செய்திகள்

நெற்குப்பை பேரூராட்சி மாதாந்திர கூட்டம்

Published On 2023-08-03 06:39 GMT   |   Update On 2023-08-03 06:39 GMT
  • நெற்குப்பை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
  • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மன்ற அலுவலகத்தில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உமா மகேஸ்வ ரன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளை மன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மன்ற உறுப்பி னர்களுக்கு உயர்த்தியுள்ள அகவிலைப்படிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நகர்ப்புற திட்டத் தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைத்தல், நகரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான குடிநீர் ஊரணிகளான நல்லூரணி மற்றும் செட்டி ஊரணி ஆகியவற்றை சீரமைத்தல், மாநில நகர்புறத் திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சார சிக்கனத்தை ஏற்படுத்தும் விதமாக புதிய எல்.இ.டி. விளக்குகளை ஏற்படுத்துதல், பள்ளத்து பட்டியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பணி தொடங்குதல் போன்ற 28 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News