உள்ளூர் செய்திகள்

சமத்துவபுர வளாகத்தில் அமைச்சர் பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா ஆகியோர் மரக்கன்று நட்டனர். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி உள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள் விழா

Published On 2022-06-06 09:10 GMT   |   Update On 2022-06-06 09:10 GMT
  • சிங்கம்புணரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோட்டைவேங்கைபட்டி அமைந்துள்ள சமத்துவபுரம் வீடுகளை வருகிற 8-ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்,

அதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சமத்துவபுரம் முன்பகுதியில் மரக்கன்றுகளை அமுதா நட்டார். இந்தஆய்வின்போது அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் பெரியகருப்பன் அணிவித்தார். மேலும் அங்கு உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து பேரூராட்சி முன்பு கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 199 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பாரதம் திட்டத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

இதில் சிங்கம்புணரி நகர்மன்ற சேர்மன் அம்பலமுத்து, துணைச் சேர்மன் செந்தில்குமார், செயல் அலுவலர் ஜான்முகமது ஞானிசெந்தில் மற்றும் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News