உள்ளூர் செய்திகள்

விழாவில் சிறந்த மாணவர் விருது பெற்ற கருப்பையனுக்கு பட்டம் வழங்கியபோது எடுத்த படம்.

பட்டமளிப்பு-விருது வழங்கும் விழா

Published On 2022-07-04 14:10 IST   |   Update On 2022-07-04 14:10:00 IST
  • காரைக்குடி கல்லூரியில் பட்டமளிப்பு-விருது வழங்கும் விழா நடந்தது.
  • கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2016-2022ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி நிறுவனர்- தலைவர் சேதுகுமணன் தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, முன்னாள் காவல்துறை இயக்குனர் ரவி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். 41 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் ரவி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது குறித்து பேசினர்.

விழாவில் பெங்களூரு அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செங்கப்பா, புளோரிடா பல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் சமுதாய அறிவியல் துறை பேராசிரியர் முத்துசாமி குமரன் சிறப்புரையாற்றினர்.

கல்லூரி இயக்குனர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பேராசிரியை விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News