உள்ளூர் செய்திகள்

பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழாவில் நடந்தது.

பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா

Published On 2023-06-11 08:56 GMT   |   Update On 2023-06-11 08:56 GMT
  • தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
  • மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் அளவு குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அதிகாலை முதல் பெரியகாரை கிராமத்தை சுற்றியுள்ள பணங்காட்டான்வயல், கள்ளிக்குடி, கோட்டவயல், நயினார்வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, வாளி, கூடையுடன் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கிராமத்து முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளைக்கொடி காட்டிய தும் மீன்பிடிக்க தயாராக இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கி னர்.

இதில் விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை போன்ற மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ அளவிலும் மேலும் அனைவருக்கும் போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுபோன்ற மீன் பிடி திருவிழாக்களால் விவசா யம் செழித்து கிராம மக்க ளின் ஒற்றுமை வளரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த மீன்பிடி திருவிழாவால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் வீடுகளில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.

Tags:    

Similar News