உள்ளூர் செய்திகள்

சவக்கட்டு ஊரணியை தூர்வார நடந்த பூமிபூஜையில் நகராட்சி தலைவர் துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை

Published On 2022-09-15 09:15 GMT   |   Update On 2022-09-15 09:15 GMT
  • ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை நடந்தது.
  • 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.

சிவகங்கை

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சவக்கட்டு ஊரணி 20ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சவக்கட்டு ஊரணி தூர்வாரபட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கம்பி வேலி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற பொறியாளர், கவுன்சிலர்கள் அன்புமணி, சண்முக ராஜன், விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், ஆறு சரவணன், கீதாகார்த்திகேயன், மதியழகன், வழக்கறிஞர் ராஜஅமுதன், ஒப்பந்ததாரர் மதி, தொழில்நுட்ப பிரிவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News