உள்ளூர் செய்திகள்

கபிலர்மலைப் பகுதியில் பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் மற்றும் குழுவினர் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் ஆய்வு

Published On 2022-11-30 09:57 GMT   |   Update On 2022-11-30 09:57 GMT
  • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
  • நேற்று கபிலர் மலையில் உள்ள துணை மின் நிலையப் பகுதி, சிறுக்கிணற்றுப்பாளையம் செல்லும் பகுதிகளில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்துள்ளனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு தீ விபத்து ஏற்படும்போது கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதி யில்உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து இப்பகுதிக்கு தீயணைப்பு வாகனம் கால தாமதமாக வருவதற்குள் தீ முற்றிலுமாக எரிந்து பொருட்கள் நாசமாகி விடுகின்றன.

தீ விபத்துக்கள் ஏற்பட்டு உடனடியாக தீ விபத்தை தடுக்க இயலவில்லை. அதனால் பரமத்தி வேலூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட ஏதோ ஒரு இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். தீ விபத்துக்கள் நடைபெறும் போது உடனடியாக சென்று தீயை அணைக்க அது ஏதுவாக இருக்கும். இப்பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட தீயணைப்பு மேல் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.அதன் அடிப்படையில் நேற்று கபிலர் மலையில் உள்ள துணை மின் நிலையப் பகுதி, சிறுக்கிணற்றுப்பாளையம் செல்லும் பகுதிகளில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது சம்பதமாக என்ஜினீயர் சேகர் எம்.எல்.ஏ., நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரிய சோளிபாளையம் ஊராட்சி தலைவர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News