உள்ளூர் செய்திகள்

போலி வாரிசு சான்று மூலம் நிலத்தை அபகரித்த அண்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி தங்கை மனு

Published On 2023-10-31 15:29 IST   |   Update On 2023-10-31 15:29:00 IST
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
  • அண்ணன் நிலத்தை கிரையம் செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கனகராணி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள, வெத்தலக்கா ரன்பள்ளம் சாலைப் பகுதியை சேர்ந்தவர் கோபு, இவரது மனைவி கனகராணி (45). கனகராணியின், தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் தந்தை பெயரில் உள்ள பூர்வீக நிலத்தை, தனக்கு முறையாக பிரித்து தராமல், போலியான வாரிசு சான்று தயார் செய்து, தனது அண்ணன் அவரது மனைவி பெயருக்கு கிரையம் செய்து, அபகரித்துக் கொண்டு, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

எனவே பூர்வீக நிலத்தை, போலி வாரிசு சான்று மூலம், அபகரித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுக்கும், அண்ணன் மீது நடவடிக்கை எடுத்து, பூர்வீக நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில்,தெரிவிக்க ப்பட்டுள்ளது, அண்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தங்கை தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News