உள்ளூர் செய்திகள்

சிலம்ப கலையை மேம்படுத்த அரசு பள்ளிகளில் சிலம்ப பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்- தமிழ்நாடு சிலம்ப கழகம்

Published On 2023-10-01 16:22 IST   |   Update On 2023-10-01 16:22:00 IST
  • பாரம்பரியமிக்க தமிழ்நாடு சிலம்ப கழகத்தை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
  • தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள், சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி:

தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் கேலோ உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் சிலம்ப வீரர்கள் நடுவர்களாக பங்குபெற நடுவர்கள் தேர்வு மற்றும் பயிற்சி முகாம் சென்னை மவுலிவாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலம்ப கலையை ஊக்குவிக்க தனியாக பாடப்பிரிவினை ஏற்படுத்தி அரசு சார்பில் பயிற்றுவிக்க அரசு பள்ளிகளில், சிலம்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

பாரம்பரியமிக்க தமிழ்நாடு சிலம்ப கழகத்தை தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். சர்வதேச, தேசிய, மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகளை நடுவர்களாக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர் சாமி , அகத்தியா ஞானபண்டிதன், கோபால், முருகக்கனி, உதயசூரியன் உள்ளிட்ட தமிழ்நாடு சிலம்பக் கழக நிர்வாகிகள், சிலம்ப வீரர்கள், சிலம்ப ஆசான்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News