உள்ளூர் செய்திகள்

விதை விற்பனையாளர்கள் நல்ல தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் -கிருஷ்ணகிரி அதிகாரி வேண்டுகோள்

Published On 2022-10-08 14:56 IST   |   Update On 2022-10-08 14:56:00 IST
  • வேளாண்மை அலுவலர் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து பகுப்பாய்வ றிக்கையினை பெற்றி டுங்கள்.

கிருஷ்ணகிரி,

விதை விற்பனையா ளர்கள் நல்ல தராமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி விதைப்பரி சோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் விதை கொள்முதல் செய்யும் போது விதை விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரி பார்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

விதை விற்பனையா ளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களின் தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கேட்டுக்கொள்கிறேன். விதை உற்பத்தியாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டி யல்களுடன், விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வறிக்கையையும் கேட்டு சரிப்பாருங்கள்.

பகுப்பாய்வறிக்கை பெறப்படாத விதைக்கு வியல்களில் இருந்து பணி விதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்துகொள்ள கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து பகுப்பாய்வ றிக்கையினை பெற்றி டுங்கள்.

விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தர மான விதைகளை விவசாயி களுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News