உள்ளூர் செய்திகள்
கழிப்பிட வசதி இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி
- 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
- கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி காவேரிபுரம் அரசு துவக்க பள்ளியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு பள்ளி அருகில் கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. கட்டிடத்தை பராமரிப்பு செய்வதாக உடைக்கப்பட்ட நிலையில் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அவற்றை முறையாக பராமரிப்பு செய்யப்படாமல் இருந்து வருவகின்றனர். இதனால் பள்ளி வரும் குழந்தைகள் கழிப்பிட வசதி இன்றி பெரும் அவருக்கும் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கல்வித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.