உள்ளூர் செய்திகள்
குன்னூர் ரேலியா அணையில் தூய்மை பணி
- சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்
- இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ரேலியா அணை பகுதியில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம் ரேலியா அணை. சுமார் 510 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட காப்புகாட்டில், 10 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 1938ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. மொத்தம் 46.3 அடி உயரம் உள்ள இந்த அணையிலிருந்து குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையை சுற்றி உள்ள பகுதிகளில் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் மனோஜ்பிரபாகர் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.