கழிவுநீர் தேங்கி கிடக்கும் காட்சி.
ஆலங்குளம் அருகே கழிவுநீரோடை தேக்கத்தால் சுகாதார சீர்கேடு- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாருகால் வழியாக குருவன்கோட்டை ஓடையில் கலக்கிறது.
- வடிகால் தரமாக அமைக்கப்படாத காரணத்தால் இதில் குப்பைகள். கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை கிராமத்தில் கழிவு நீரோடையில் ஏற்பட்ட தேக்கத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் உள்ள முதல் தெருவின் ஒரு பக்கம் ஆலங்குளம் பேரூராட்சி 4-வது வார்டின் ஒரு பகுதி, மற்றொரு பக்கம் மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை ஆகியவை உள்ளது.
இத்தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாருகால் வழியாக குருவன்கோட்டை ஓடையில் கலக்கிறது. இந்த கழிவு நீர் வெளியேறும் பகுதியில் சில மாதங்களுக்கு முன், வடிகால் ஏற்படுத்தப்பட்டது.
குப்பைகள் இன்றி தண்ணீர் மட்டும் வெளியேற வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வடிகால் தரமாக அமைக்கப் படாத காரணத்தால் இதில் குப்பைகள், கழிவுகள் தேக்கமடைந்து, கழிவு நீரும் வெளியேற இயலாமல் அதில் தேங்கிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் இப்பகுதியில் வசிப்போருக்கு இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் மூலம் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.