உள்ளூர் செய்திகள்

அதியமான் கோட்டை காளியம்மன் கோவிலில் சாமி வீதி உலா நிகழ்ச்சி

Published On 2023-04-10 09:58 GMT   |   Update On 2023-04-10 09:58 GMT
  • முக்கிய நிகழ்வாக சதாவரம் காளியம்மன் சிங்க வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • காளியம்மன் மற்றும் கீழ் காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களும் பக்தர்களுக்காக சிங்க வாகனத்தில் ஒரே சமயத்தில் காட்சியளித்தனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை பகுதியில் கால பைரவர் கோவில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ள பகுதியில் அருகிலேயே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் அமைந்துள்ளது.

இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தொடங்கி சித்திரை மாதம் வரை சுமார் 15 நாட்கள் தேர்த்திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

தேர் திருவிழாவிற்கு முன்னதாக காளியம்மனை குலதெய்வம் ஆகும் கண் கண்ட தெய்வமாகவும் வணங்கக்கூடிய 152 கிராம மக்களுக்கு கிராமங்களுக்கு காளியம்மன் திருவீதி உலா பதினோரு நாட்கள் சென்று திரும்பி கோவிலுக்கு வந்த பிறகு மகா தேரோட்டம் நடைபெற்றது.

தேர் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் கோவில் வளாகத்தின் அருகிலேயே காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் பசியாற கூழ் அமுது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூழ் அமுது 152 கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று முக்கிய நிகழ்வாக சதாவரம் காளியம்மன் சிங்க வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேல் காளியம்மன் மற்றும் கீழ் காளியம்மன் ஆகிய இரண்டு தெய்வங்களும் பக்தர்களுக்காக சிங்க வாகனத்தில் ஒரே சமயத்தில் காட்சியளித்தனர். கூடியிருந்த பக்தர்கள் திரளாக வழிபட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News