உள்ளூர் செய்திகள்
- பிப்ரவரி 14 -ம் நாள் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
- காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
தருமபுரி,
2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பிப்ரவரி 14 -ம் நாள் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்த வீரர்களுக்கு நான்காம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தருமபுரி நான்கு ரோடு அண்ணா சிலை அருகே உயிர் தியாகம் செய்த 40 துணை ராணுவீர்களின் உருவப்படத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம், நகர காவல் உதவி ஆய்வாளர் விஜய் சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சின்னசாமி உள்ளிட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.