உள்ளூர் செய்திகள்
தண்டவாளத்தில் படுத்து வாலிபர் தற்கொலை
- எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்ததது.
- ரெயில் அவர் மீது ஏறியதில் அவரது உடல் 2 துண்டானது.
சேலம்:
சேலம் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்ததது.அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் திடீரென தண்டவா ளத்தில் படுத்து கொண்டார். ரெயில் அவர் மீது ஏறியதில் அவரது உடல் 2 துண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர் என விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதேபோல் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.