உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.

உளுந்தூர்பேட்டையில் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சேலம் என்ஜினியர்

Published On 2023-06-12 13:54 IST   |   Update On 2023-06-12 13:54:00 IST
  • விமல் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 35). சாப்ட்வேர் என்ஜினியர். இவர் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தனது காரில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடு கட்டையை உடைத்துக் கொண்டு எதிர் திசை நோக்கி பறந்து சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடந்த போது கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர் பேட்டை போலீசார் விமலை மீட்டு போலீசாரின் நெடுஞ் சாலை ரோந்து வாகனத்தில் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News