உள்ளூர் செய்திகள்
100 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது
- சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
- அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 100 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 100 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முள்ளாக்காடு கோதண்டராம செட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மேலும் அவர் சத்திரம் பகுதியில் உள்ள மதுகடையில் மதுபாட்டில்களை வாங்கி பள்ளப்பட்டி பகுதியில் சந்துகடை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர் மீது பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.