உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பெண் உட்பட 2 பேரிடம் ரூ.11 லட்சம் மோசடி

Published On 2023-06-04 08:13 GMT   |   Update On 2023-06-04 08:13 GMT
  • கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.
  • தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.

சேலம்:

சேலம் அழகாபுரம் புதூர் பகுதி சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தவமணி (வயது 39).

இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.

பின்னர் மேற்கண்ட நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது, இதையறிந்த தவமணி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திவாகர் (29).

இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு அதிகம் சம்பளம் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து பதிவு செய்துள்ளார். அதற்கு சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்ட மர்ம நபர் சில டாஸ்-க்குகளை செய்யச் சொல்லி அதன் மூலம் பணத்தைக் கட்ட சொல்லியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி திவாகர் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கட்டியுள்ளார்.

சில நாட்களில் வேலை தருவதாக கூறி குறுந்தகவல் வந்ததை தொடர்ந்து காத்திருந்த திவாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தொடர்ந்து திவாகர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News