உள்ளூர் செய்திகள்
ஆணைமடுவு பகுதியில் 12 மி.மீ மழை பதிவு
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலையில் சாரல் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஆத்தூர், ஏற்காடு, கரியகோவில், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. ஏற்காடு பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இந்த மழையினால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- ஆனைமடுவு - 12, மேட்டூர் - 10, ஏற்காடு - 6.4, கரியகோவில்- 2, ஆத்தூர்- 1.8, பெத்தநாயக்கன்பாளையம்-1.5, எடப்பாடி-1.2,சேலம் - 1, ஓமலூர்-1 சேலம் மாவட்டத்தில் மொத்தம் 35.50 பதிவாகி உள்ளது.