உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி தொடக்க விழா

Published On 2022-12-22 09:47 GMT   |   Update On 2022-12-22 09:47 GMT
  • சுதந்திரா இயக்கம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் திறனறிவு போட்டிகளை நடத்தி வருகிறது.
  • சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து வைக்கிறார்.

சேலம்:

தமிழகம் முழுவதும் சமூகநல சேவைகளை செய்து வரும் சுதந்திரா இயக்கம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் திறனறிவு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த சேலம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை சுதந்திரா இயக்கம், ஜெ.எஸ்.டபிள்யூ உதவியுடன் நடத்துகிறது.

தொடக்க விழா

இதன் தொடக்க விழா நாளை மறுநாள் (24-ந்தேதி) சேலம் திருச்சி மெயின்ரோடு குகையில் உள்ள சுதந்திரா இயக்கம் மாநில தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகின்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்குகிறார்.

ஜே.எஸ்.டபிள்யூ எக்ஸ்கியூட்டிவ் துணை சேர்மன் பிரகாஷ்ராவ், பொது மேலாளர் அரிராஜ், சி.எஸ்.ஆர். மூத்த மேலாளர் பாரதி பழனிசாமி, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவரஞ்சன், சேலம் மாவட்ட செஸ் அசோஷியேசன், செயலாளர் அருண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்கள்.

ஏற்பாடுகள் தீவிரம்

சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து வைக்கிறார். அரசு மற்று தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் சுதந்திரா இயக்க நிர்வாகிகள் மற்றும் மூத்த தேசிய சதுரங்கப் போட்டி நடுவர் சக்திவேல் செய்து வருகின்றனர்.

வருகிற ஜனவரி மாதம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்த திட்டுமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News