உள்ளூர் செய்திகள்

சேலம் வந்த உரம் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிய போது எடுத்த படம்.

சேலம் மாவட்டத்தில் 4,374 டன் உரம் இருப்பு உள்ளது

Published On 2022-10-12 09:11 GMT   |   Update On 2022-10-12 09:11 GMT
  • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது.
  • 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்.

சேலம்:

சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,300 டன் கிரிப்கோ யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தது. இந்த உர மூட்டைகள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 600 டன் உரமும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 300 டன் உரமும் அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 1,464 டன் யூரியா, டி.ஏ.பி. 916 டன் டி.ஏ.பி., பொட்டாஸ் 364 டன், காம்ளக்ஸ் 1,630 டன் என மொத்தம் 4,374 டன் உரம் இருப்பு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் உரத்தை பெற்று பயன் அடைய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News