கண்வலிகிழங்கு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்வலி கிழங்கு விதை விற்பனை
- 8 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை விற்பனை முறைப்படுத்த ப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
வேளாண் விளை பொருள் விற்பனை சட்டம் 1987 ன் படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, வடமதுரை மற்றும் வேட சந்தூர் ஆகிய 8 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை விற்பனை முறைப்படுத்த ப்பட்டுள்ளது.
எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கண்வலி கிழங்கு விதை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் அறிக்கையிடப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை க்கூடங்களில் ஒருங்கி ணைந்த ஒற்றை உரிமம் பெற்று கண்வலி கிழங்கு விதை விளை பொருளினை கொள்முதல் செய்திட வேண்டும். விவசாயிகள் கண்வலி கிழங்கு விதை விளைபொருளினை ஒழுங்குமுறை விற்பனை க்கூடங்களில் செயல்பட்டு வரும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்திட ஏதுவாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.
எனவே, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.