30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய எஸ்.பாலம் ஏரி
- எஸ்.பாலம் அருகே மீராசாகிப் ஏரி 30 ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளது.
- இது, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாலம் மீராசாகிப் ஏரி 30 ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை பொழிந்ததால் வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் இந்த ஏரியில் மட்டுமே மழைநீர், ஊற்றுநீர் நிறைந்து கோடைகாலம் தொங்கும் நிலையிலும் கடல்போல் காட்சியளிக்கிறது. இது, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஏரியை சுற்றிலும் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் தற்போது இந்த பகுதியில் விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வீரபாண்டி ஒன்றியம் கஞ்சமலையில் பெய்யும் மழைநீர் வடிந்து 5 ஏரிக ளுக்கும், 3 குட்டைகளுக்கும் செல்லும்படி ஓடை கால்வாய் இணைப்பு உள்ளது. அவை புதர்மண்டி இருந்ததால், ஏரிகளுக்கு தண்ணீர் வராமல் இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, வீரபாண்டி ஒன்றிய என்ஜினீயர்கள் தொடர் முயற்சியால், சீரகாபாடி, கடத்தூர், ராஜாபாளையம், சென்னகிரி ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ஓடை கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து அகலப்ப டுத்தும் பணி, 2 ஆண்டு களுக்கு முன் தொடங்கியது. கஞ்சமலையில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் ஓடை கால்வாய்கள், 3 மீட்டர் அகலம் இருந்ததை 6 மீட்டர் ஆக அதிகரித்து தேவையான இடங்களில் தண்ணீர் தேங்க பள்ளம் தோண்டி தடுப் பணைகளும் கட்டப்பட்டன. இதன் பலனாக எஸ்.பாலம் ஏரி 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.