உள்ளூர் செய்திகள்

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார கல்வி மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-07-05 13:52 IST   |   Update On 2022-07-05 13:52:00 IST
  • 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 3 வரும் இதே துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தி லுள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், வட்டார இயக்க மேலாளர் -1, வட்டார ஒருங்கிணைப்பாளர்-11 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் மேற்படிப்புடன் அடிப்படை கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 3 வரும் இதே துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் இந்த துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காலி பணியிடம் உள்ள வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவம் கிருஷ்ணகிரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திலும் மற்றும் 10 வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்காணும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், எண்.106, இரண்டாம் தளம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வருகிற 11-ம் தேதிக்குள் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் தொடர்பான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News