உள்ளூர் செய்திகள்

ரூ.6 லட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்

Published On 2023-10-06 15:30 IST   |   Update On 2023-10-06 15:30:00 IST
  • கிருஷ்ணகிரியில் ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் இணைப்பு பணிகள் நடந்தன.
  • அசோக்குமார் எம்.எல். ஏ., தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி புளியந்தோப்பு கொத்தாலன் கொட்டாய் கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில், ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணறு முதல் சின்டெக்ஸ் டேங்க் வரை குழாய் அமைத்து 25 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்ப டுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட றிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ராதா சென்றாயன், ஊர்கவுண்டர் திம்மராயன், கோவிந்தன், மாதன், ரமேஷ், குமார், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News