உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாமை கலக்டர் சரயு தொடங்கி வைத்து வைப்பு தொகை ரசீதுகளை வழங்கிய காட்சி.

593 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி வைப்பு தொகை

Published On 2023-09-20 15:47 IST   |   Update On 2023-09-20 15:48:00 IST
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
  • பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகை ரசீதுகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்து, 593 பயனாளிகளக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத் தொகை ரசீதுகளை பயனாளிகளிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து, உயர் கல்வி படிக்கும் பெண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமையன்று இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று நடை பெற்ற இந்த சிறப்பு முகாமில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்த 593 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வைப்புத்தொகை ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 250 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தமிழ் நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. வைப்பீடு செய்யப்பட்ட தொகை பெண் குழந்தைகளின் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், அவர்களது வங்கி கணக் கிற்கு நேரடியாகவோ அல்ல து காசோலையாகவோ வழங்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் சுமார் 800க்கும் மேற்பட்ட பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று உயர்கல்வி பயன்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் சமுக நல அலுவலக களப்பாணி யாளர்கள் மூலம் இத்திட்டம் தொடர்பாக விழிப்புர்ணவு மேற்கொண்டு புதிய பயனா ளிகளை கண்டறியவும், இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிடவும் மற்றும் இத்திட்டம் தொடர்பாக ஏற்பாடும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வள அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News