உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே சத்துணவு ஊழியர் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

Published On 2022-12-29 13:46 IST   |   Update On 2022-12-29 13:46:00 IST
  • குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை வாங்கினர்.
  • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன், பூபதி ஆகிய இருவரும் கூவம் அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை வாங்கினர். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தார்.

மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட குபேந்திரன், பூபதி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News