உள்ளூர் செய்திகள்

தச்சமொழி - முதலூர் சாலையோரம் உள்ள பள்ளங்கள் .

சாத்தான்குளம் அருகே சாலையோர பள்ளங்களால் பொதுமக்கள் அவதி

Published On 2023-05-08 09:07 GMT   |   Update On 2023-05-08 09:07 GMT
  • சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.
  • ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. வேதக்கோவில் பகுதியில் இருந்து முதலூர் செல்லும் சாலை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாத்தான்குளம்-முதலூர் செல்லும் சாலையில் தச்சமொழி பகுதியில் அங்குள்ள வளைவில் இருந்து ஆலமர பஸ் நிறுத்தம் இடையே சாலையோரத்தில் மணல் குவிக்கப்பட்டு கரைசேவை செய்யப்பட்டது.

ஆனால் மணல் சரியாக போடாததால் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

சாலையோரத்தில் தண்ணீர் தேங்கியபோது அதில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீது சகதி நீர் பாய்வதால் மிகுந்த சிரமத்தில் சென்று வர வேண்டிய உள்ளது. இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நெடுச்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் இதுவரை எந்தவித மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இருசக்கர வாகனங்கள், இதர வாகனங்கள் இந்த பள்ளங்களால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படாமல் இருக்க இந்த சாலையோர பள்ளங்களை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News