உள்ளூர் செய்திகள்

மதுக்கூரில் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

Published On 2023-01-14 09:16 GMT   |   Update On 2023-01-14 09:16 GMT
  • மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.
  • பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே புலவஞ்சி கிராமத்தில் அரசுக்கு ெசாந்தமான தரிசு பாதை நிலம் தனி நபரால் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இது பற்றி காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி போஸ் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தையும், வருவாய் துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்து காவிப்புலிப்படை சார்பில் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.

இதுகுறித்த செய்தி ஏற்கனவே மாலைமலரில் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போஸ், அரசு தரிசு நிலத்தை அடைத்திருந்த தனிநபர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு தரிசு நிலத்தை அடைத்த பாதையை திறந்து விட வேண்டும், பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News