உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி தலைமையில் நடைபெற்றது.

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2022-10-14 08:22 GMT   |   Update On 2022-10-14 08:22 GMT
  • தேங்கிய மழைநீரை உரிய எந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை.
  • கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு நாட்களில் சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர்அமுதவல்லி தலைமையில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தி ல்மழைநீர் வடிகால்வாய்கள் சத்தம் செய்யப்பட்டு தூர்வாரி ஆழப்படுத்துவதையும், தேங்கிய மழைநீரினை உரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடற்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான ஆய்வறிக்கை திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்காலிகமாக உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசினார். அதனை தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசியதாவது:

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு தினங்களில சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதனால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ள ப்படுகி றார்கள். மாவட்டத்திலுள்ள 4 பல்நோக்கு நிவாரன முகாம்கள் மற்றும் தற்காலிக நிவாரன முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர் பாராத அசம்பாவிதங்களை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்அ ர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), இணை இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர்கவித பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News