உள்ளூர் செய்திகள்

டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார தூய்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற்ற காட்சி.

டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம்

Published On 2023-09-23 15:47 IST   |   Update On 2023-09-23 15:47:00 IST
  • கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
  • மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகள், நீர் தேங்கும் இடங்களில் குளோரிநேசன் செய்யவும், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்தவும் கொசு உற்பத்தியாவை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிக்கும் பாத்திரங்களை அவ்வப்போது தூய்மை செய்து, மூடி வைத்து உபயோகப்படுத்தவும் மற்றும் சுற்றுப்பு றத்தில் மழைநீர், கழிவுநீர் போன்றவை தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் மற்றும் மழைக்காலங்களில் வீட்டின் அருகாமையில் தேங்கியுள்ள நீர்நிலைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்தவும், மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் பொது மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகிசிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். தினந்தோறும் குடிநீர் நிலைகளில் குளோரி நேசன் செய்யப்பட வேண்டும். உடைந்த குடிநீர் பைப்புகளை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். பழைய டயர்களை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்து, அவர்களுடைய வீட்டில் உள்ள கொசுப்புழுவை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மொட்டை மாடியிலுள்ள மேல்தளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க கொசு புழு உற்பத்தியாகாமல் இருக்க வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் குளோரிநேசன் செய்ய வேண்டும. தனியார் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்துக் கடை உரிமையா ளர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பரமசி வம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.பூவதி மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர். 

Similar News