மணல் மூட்டைகள் அடுக்கி கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல்-அடுக்கம் சேதமடைந்த சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
- மழையின் காரணமாக மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆபத்தாக உள்ள இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் மற்றும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானல் அருகே பெரியகுளம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் அடுக்கம், குருடிக்காடு பகுதியில் சாலை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அந்தப்பகுதியில் சாலையை சீரமைக்கும் பணியானது நெடுஞ்சாலைத் துறை மூலமாக நடைபெற்று வருகிறது. ஆபத்தாக உள்ள இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வருகின்றனர்.
தொடர்ந்து கொடைக்கானலில் மழை காலம் தொடங்க உள்ளதால் ஆபத்தான இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.